தேவகாந்தாரி Welcomes you !

“ஒரு சிற்றோடையின் சலசலப்பாய்...சிறகாய்…சிலிர்ப்பாய்..
எனக்குள், ஒலி எழுப்பும் சங்கீத சப்தஸ்வரமாய்…நீ "

Tuesday, June 22, 2010

எழுத்து மூலம் பேசலாமா ???? - 1


 Well..... the drawing you see above is done by me.
Just wanted to relate the story below with the above drawing so did this line art in 4 minutes.
Please do pardon me if it looks horrible :P.....
Now lets go to the story......I am not a big writer but just wanted to  share a simple thought in a simple way.
 
 **********************************************************************

குமார் வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்......செல் ஒலித்தது....
எடுத்து பார்த்தான், குமாரின் மேலதிகாரி சிவா......"என்னன்னு தெரியல குமார் .....திடீர்னு சிஸ்டம் ஹங் ஆயிடுச்சு.....என்ன பண்றதுன்னு புரியல அது தான் உன்கிட்ட கேட்கலாம்னு" என்று சொன்னான்.

 உடனே இவன் மனசுக்குள் " ஹ்ம்ம் இவனுக்கெல்லாம் ஒரு கம்ப்யூட்டர் என நினைத்துக்கொண்டு  "சார் , ctrl+Alt+Del கீய்ஸ் பிரஸ் பண்ணுங்க ....ஷாட்டௌன் பண்ணிட்டு மறுபடி ஆன் பண்ணுங்க , சரியாயிடும்"  என்றான். 

மீண்டும் பயணத்தை தொடரலாம் என்று பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் பட்டனை அமுக்கினான் .....ஸ்டார்ட் ஆகவில்லை  வண்டி !
என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருந்தவனை தூரத்தில் சைக்கில் திருத்தும் கடை வைத்து இருந்த 15 வயது பையன் ஒருவன் பார்த்துவிட்டு , அருகில் வந்து "சோக் போட்டு ஸ்டார்ட் பண்ணுங்க சார்....ஸ்டார்ட் ஆயிடும்"  என்றுவிட்டு போனான். போனவன் சும்மா போகாமல் சத்தமாகவே சொல்லி விட்டு சென்றான்......
"ஹ்ம்ம்...இவனுக்கெல்லாம் ஒரு பைக் " என்று !!!!

************************************************************************

என்ன எதாச்சும் புரிஞ்சுதா???????? 
புரியல்லேன்னா அது என்னோட தப்பு கிடையாதுங்க .
சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு....ஏன் சில பல அனுபவங்களும் உண்டு
ஒரு விஷயம் ஒருத்தருக்கு தெரியலேன்னா....அது தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு சொல்லி குடுக்கலாம்..... தப்பு இல்லை. ஆனால் அது சொல்லி குடுத்துட்டு, "இவனுக்கு இது கூட தெரியல பாருன்னு" மனசுல  நினைக்க கூடாது. ஒருத்தருக்கு நாம சொல்லி கொடுக்கும் பொது நாம சொல்லி மட்டும் குடுப்பதில்லை.  ஆனால் நமக்கு தெரிஞ்சத நாம நினைவு வெச்சுக்க பழகிக்குறோம்.

எனக்கு தெரிஞ்ச விஷயம் சில சமயம் உனக்கு தெரிந்து இருப்பதில்லை.
உனக்கு தெரிஞ்ச விஷயம் பல சமயம் எனக்கு தெரிஞ்சு இருப்பதில்லை.
ஏன் உனக்கும் எனக்கும் தெரிஞ்ச விஷயம் சிலருக்கு பல சமயம் தெரிஞ்சு இருப்பதில்லை . பலருக்கு தெரிஞ்ச விஷயம்  சிலசமயம் உனக்கும் எனக்குமே தெரிஞ்சு இருப்பதில்லை......

தெரிஞ்சத தெரியாதவங்களுக்கு சொல்லி குடு.....நெஞ்சில் வஞ்சமில்லாமல்.
தெரியாததை தெரிஞ்சவங்ககிட்ட இருந்து கத்துக்க மனதில் திமிர் இல்லாமல், வாழ்கை இனிக்கும்.

சரி....மொக்கை போட்டு முடிச்சுட்டேன்......
இன்னொரு நாள் இது போல ஒரு சொதப்பல் கதைமூலம் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி ! வணக்கம் !!!!










 

5 comments:

  1. Hey Rosh! :)

    Unable to read, as I am illiterate (in tamil).. ;) However, the drawing was great for a 4 minutes work!!! :-O Idhellaam eppadi??? :D

    Good one! All the very best!


    - Sushanth

    ReplyDelete
  2. Hay it was a nice story most of the people who thinks like this, always u can learn something from others, and teach them if u know more than that........... Life will be so easy and people will respect U
    ----------------- Anto ---------------------------

    ReplyDelete
  3. Sush - Thank you So much and adhulaam apdi apdi thaan ;)

    Anto - Thank you, and you are 100 % right :D

    ReplyDelete
  4. Rosh.. Onnu mattum enakku Thelliva purinjuthu.. indha kadhai ku ninga varianja padam 4th standard padikkum pothu varainjathu thaanae? Eppadi kandupudichean paartheengalla.. :P Art by Roshu :P Summa sollakoodathu.. appave 4 minutes le ippadi oru drawing varainjuru keenga nna ? ippo eppadi varaiveenga? :O

    ReplyDelete
  5. Nice one rosh.. 1st of all..i liked the way maintain the blog with multiple posts..

    this story is a real good one.. kumudam anandha vikadan na kutti kutti ithu mathiri story poduvanga oru pakka kadai arai pakka kadhainu..i could feel like reading one of them..

    narration also nice..i liked it really..charactor establishmentu nnu onnu irukku..athu mukiyam..athu oru varthaila kooda pannidalam..athu pathi apram solren..

    and the drawing is real awesome..tht to in 4 min..u are multi talented..u have sense of drawing..shadinglam kuduthu irukinga..payyan mattum payyan mathiri therila konjam doest matter..

    90 marks..

    anbudan

    ReplyDelete